மதுரையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு.. இரு இளைஞர்கள் கைது… வெளியானது பகீர் சிசிடிவி காட்சிகள்… போலீசார் விசாரணையில் பகீர்…!!

Author: Babu Lakshmanan
28 July 2023, 5:05 pm

மதுரை விராதனூர் அருகே அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கட்டம்மன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த சப்பானி என்கிற முதியவரை இடத்தகராறில் அடித்துள்ளார்.

அந்த சண்டையின்போது கட்டபொம்மன் கோட்டையைச் சேர்ந்த சஞ்சய், காந்தி ஆகிய இருவரையும் விலக்கி விட்டுள்ளார். இது தொடர்பாக அருகே அருகே உள்ள கட்டம்மன் கோட்டையில் இருந்து 300 மீட்டர் அருகே உள்ள மதுரை மாவட்டம் உட்பட்ட சத்யா நகரை சேர்ந்த மகாமுனி என்பவர் கணேசை அழைத்து கூப்பிட்டு பிரச்சனை செய்ய வேண்டாம், காவல்துறையில் சரணடைந்திருங்கள், என்று அறிவுரை கூறியுள்ளார்.

இந்த நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கணேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந் நிலையில், இதற்கு ஊர்க்காரர்களை பழி வாங்கும் நோக்கில், கணேசனுடைய தம்பி மாதவன் மற்றும் அவருடைய நண்பன் பிரசன்னா இருவரும், இரவு நேரத்தில் சண்டையை விலக்கி விட்ட சஞ்சய், காந்தி வீட்டிலும் மற்றும் அறிவுரை கூறிய மகாமுணியின் சத்யா நகரில் அமைந்துள்ள கடையிலும் இரவு நேரத்தில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயப்படவில்லை.

ஆனால், பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துள்ளது. இது தொடர்பாக தற்போது சிசிடிவி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!