மதுரை விராதனூர் அருகே அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கட்டம்மன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த சப்பானி என்கிற முதியவரை இடத்தகராறில் அடித்துள்ளார்.
அந்த சண்டையின்போது கட்டபொம்மன் கோட்டையைச் சேர்ந்த சஞ்சய், காந்தி ஆகிய இருவரையும் விலக்கி விட்டுள்ளார். இது தொடர்பாக அருகே அருகே உள்ள கட்டம்மன் கோட்டையில் இருந்து 300 மீட்டர் அருகே உள்ள மதுரை மாவட்டம் உட்பட்ட சத்யா நகரை சேர்ந்த மகாமுனி என்பவர் கணேசை அழைத்து கூப்பிட்டு பிரச்சனை செய்ய வேண்டாம், காவல்துறையில் சரணடைந்திருங்கள், என்று அறிவுரை கூறியுள்ளார்.
இந்த நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கணேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந் நிலையில், இதற்கு ஊர்க்காரர்களை பழி வாங்கும் நோக்கில், கணேசனுடைய தம்பி மாதவன் மற்றும் அவருடைய நண்பன் பிரசன்னா இருவரும், இரவு நேரத்தில் சண்டையை விலக்கி விட்ட சஞ்சய், காந்தி வீட்டிலும் மற்றும் அறிவுரை கூறிய மகாமுணியின் சத்யா நகரில் அமைந்துள்ள கடையிலும் இரவு நேரத்தில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயப்படவில்லை.
ஆனால், பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துள்ளது. இது தொடர்பாக தற்போது சிசிடிவி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.