மயங்கி விழுந்து மரணமடைந்த மதுரை வீரர் : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியின் போது சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2023, 1:54 pm

உதகை எச்.ஏ.டி.பி.., உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் கூடைப்பந்து போட்டியில் இன்று நடந்த போட்டியில் மதுரை வீரர் நேரு ராஜன்,60, விளையாடி கொண்டிருந்த போது மரணம் அடைந்தார்.

50 வயதிற்குட்ப்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைபந்து போட்டிகள் நேற்று உதகையில் துவங்கியது.

உதகை சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்த வெளி மைதானத்தில் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் 50 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடந்து வருகிறது.

இப்போட்டிகளில் நீலகிரி, சென்னை, கோயமுத்தூர், திருப்பூர் உட்பட 20 க்கும் மேற்ப்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. சுமார் 300 வீரர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் மதுரை மற்றும் கோவை அணிகள் விளையாடி கொண்டிருந்த போது மரணம் அடைந்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!