போலீஸில் பணிபுரிந்த மோப்பநாய் அர்ஜூன் மரணம் ; 24 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்…

Author: Babu Lakshmanan
20 January 2023, 9:14 pm

மதுரை மத்திய சிறை வெடிகுண்டு தடுப்பு பிரிவு மோப்ப நாய் காலமான நிலையில், 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

மதுரை மத்திய சிறை காவல்துறையில் பணிபுரிந்து வந்தது டிஎஸ்பி ரேங்க் வெடிகுண்டு தடுப்பு பிரிவு மோப்பநாய் அர்ஜூன்(13). இந்த மோப்பநாய் உடல்நலக்குறைவால் இன்று காலமானது.

இதையடுத்து, 24 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டு இறுதி சடங்கு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சிறைத்துறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் தலைமையில் காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!