பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு… அரிவாளால் போலீசாரை தாக்க முயன்ற போது நிகழ்ந்த சம்பவம் ; மதுரையில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 11:05 am

மதுரை : மதுரையில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22ஆம் தேதி மதுரை வளர்நகர் பகுதியில் பாலமுருகன் (எ) டோரா பாலா கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வினோத் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி வினோத்தை கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அடையாள அணிவகுப்புக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, ரவுடி வினோத் போலீசாரை வெட்டி விட்டு தப்பி ஓட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், சுதாரித்துக் கொண்ட மாட்டுத்தாவணி போலீசார், அரிவாளால் வெட்ட வந்த ரவுடி வினோத்தை துப்பாக்கியால் சுட்டனர். இதனால், காலில் குண்டு பாய்ந்த நிலையில், சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அரிவாளால் தாக்க முயன்ற பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!