நோயாளிகளை காக்க வைத்து விட்டு சேலை விற்பனையில் மருத்துவர்கள்… அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்..!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 12:36 pm

மதுரை, அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளை காக்க வைத்து விட்டு மருத்துவமனையின் ஒரு அறையில் நடைபெற்ற சேலை விற்பனையை பார்க்க சென்ற செவிலியர்கள் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல், காக்க வைக்கப்பட்டு, செவிலியர்கள் ஒரு அறையில் ஒருங்கிணைந்து சேலை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, விற்பனையில் ஈடுபட்ட பெண்களிடம் செவிலியர்கள் மும்முரமாக பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனை சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவர், நீண்ட நேரம் காத்திருந்தும் செவிலியர்கள் தங்களது பணியை செய்யாததால் விரக்தி அடைந்து, தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு, தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கழிவறைக்கு சென்ற 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடைபெற்றது எனவும், செவிலியர்கள் யாரும் சேலை விற்பனை செய்வதை வேடிக்கை பார்க்க செல்லவில்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Nithya Menon Kisses Director Mysskin தயவு செஞ்சு தொடாதீங்க.. இயக்குநருக்கு முத்தம் கொடுத்த நடிகை : வெளியான பரபரப்பு வீடியோ!
  • Views: - 245

    0

    0