‘அவனா தான் விட்டான்’… 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து… 2 பேர் உயிரிழப்பு.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

Author: Babu Lakshmanan
28 April 2023, 5:57 pm

மதுரையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரையில் இருந்து போடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் பாலமுருகன் இயக்கிய இந்தப் பேருந்து, நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள அணு சாலையில் வரும் பொழுது 20 அடி பள்ளத்தில் கவிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குருசாமி, பிச்சை ஆகிய இரு முதியவர்கள் உயிரிழந்தனர்.

மேலும், பேருந்துக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நாகமலை, புதுக்கோட்டை காவல்துறையினர், தப்பியோடி டிரைவர் மற்றும் நடத்துனரை தேடி வருகின்றனர்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!