குடிநீர் குழாய் பதிப்பதற்கு அனுமதி வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம்… 2 பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைது!!

Author: Babu Lakshmanan
30 April 2024, 10:00 pm

மதுரையில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு லஞ்சம் கேட்ட இரண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஷமீர் காசிம் என்பவர் தனது தாயாரின் இரண்டு ஏக்கர் நிலத்தின் இருபுறமும் அமைந்துள்ள ஓடையின் குறுக்கே தனது சொந்த செலவில் குழாய் பதிக்க, பொதுப்பணித்துறையில் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.

மேலும் படிக்க: குடிநீரைப் பற்றி கவலை இல்ல… பீர் தட்டுப்பாட்டைப் போக்க இப்படி ஒரு உத்தரவா..? தமிழக அரசு மீது அன்புமணி ஆவேசம்..!!

அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் 5 லட்சம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர். இதற்காக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் நீர்ப்பாசன ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரிடம் ஷமீர் காசிம் முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் போது நேரடியாக லஞ்ச ஒழிப்பு துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!