பறக்கும் பாலத்தில் அதிவேகமாக வந்த பைக் விபத்து… நண்பர்கள் இருவர் தூக்கிவீசப்பட்டு பலி.. மதுரையில் சோகம்!!

Author: Babu Lakshmanan
8 July 2023, 8:44 am

மதுரை நத்தம் பறக்கும் பாலத்தின் அதிவேகத்தில் வந்த பைக் பக்கவாட்டு சுவரில் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் வடக்குமாசி வீதி பகுதியை சேர்ந்த ஆனந்த்கிருஷ்ணன் மற்றும் மதுரை பெத்தானியாபுரம் மூலப்பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (24) ஆகிய இருவரும், மதுரை கள்ளந்திரி பகுதியில் உள்ள அவர்களது நண்பரின் கிணற்றில் குளித்துவிட்டு பைக்கில் மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது, பறக்கும் பாலத்தில் மேல் பைக்கில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது, அவுட்போஸ்ட் அருகே மேம்பாலத்தில் திரும்பும்போது, வளைவில் பக்கவாட்டு சுவர் மீது மோதியது. இதில் வேகமாக பைக் மோதியதில் பைக்கை ஓட்டி வந்த ஆனந்தகிருஷ்ணன் சுவரில் மோதி உயிரழந்த நிலையில், மேம்பாலத்தில் இருந்து பறந்து சென்று கீழே விழுந்து சீனிவாசன் தலை சிதறி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் பக்கவாடடு சுவர்கள் சிறியதாக இருப்பதாலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாத நிலையிலும், இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாத நிலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஒட்டி செல்லும் நிலை உள்ளது. இதுபோன்று நாள்தோறும் ஏராளமான இளைஞர்கள் ஆடம்பர பைக்கில் பைக் ரேஸில் ஈடுபடுவதாலும் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

  • getti melam serial actor Passed away தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!