‘ஸ்கூலுக்கு லேட் ஆகிருச்சு’… அவசரத்தில் ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் கடந்து செல்லும் பள்ளி சிறுவர்கள்!!

Author: Babu Lakshmanan
12 October 2022, 6:30 pm

மதுரை ; மதுரையில் அவசரத்தில் ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் புகுந்து பள்ளி மாணவர்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பள்ளி செல்லும் நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் விரைவு ரயில் திடீரென சிக்னல் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லவிருந்த பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் என ஏராளமான நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.

தொடர்ந்து, பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆபாயத்தை உணராமல் பள்ளிக்கு விரைந்து செல்ல வேண்டும் என்பதற்காக ரயிலுக்கு அடியில் ஆபத்தான வகையில் கடந்து சென்றனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!