ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ரெய்டால் சிக்கிய பிரபல கடைகள்…!!!
Author: Babu Lakshmanan5 May 2022, 6:26 pm
மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி 10 கிலோ கெட்டுப்போன சிக்கனை பறிமுதல் செய்தனர்.
அண்மையில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவர் சாப்பிட்டக் கடையில் அதே ஷவர்மாவை சாப்பிட்ட மேலும் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கெட்டுப் போன சிக்கனை பயன்படுத்தியதால், மாணவிக்கு மரணம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கடையின் உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 52 கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, 10 கிலோ பழைய சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 5 கடைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சிக்கன் ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது என்றும், சமைத்த உணவுப்பொருட்களை ப்ரீட்ஜரில் வைக்க கூடாது என்றும், உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.