கட்டுக்குள் வராத தெருநாய்கள் தொல்லை… மதுரை மாநகராட்சியின் அலட்சியம்… நாய்களுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி நூதன எதிர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
18 December 2023, 4:45 pm

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தாத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாய்களுக்கு கேக்வெட்டி பெயர் சூட்டி பொதுமக்கள் நூதன எதிர்ப்பு தெரிவித்தனர்.

மதுரை செல்லூர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை என மாநகராட்சிக்கு அடுக்கடுக்கான புகார் வந்த வண்ணம் உள்ளது. புகார்கள் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், செல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி என்ற சமூக ஆர்வலர், பொதுமக்களுடன் இணைந்து மாநகராட்சியை கண்டித்து தெரு நாய்களுக்கு கேக் வெட்டியும், பெயர் சூட்டும் விழா நடத்தி பொதுமக்களின் எதிர்ப்பை தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவு திரிவதால் சுகாதாரத்துறை நடவடிக்கைகள் எடுக்காத நிலையில், நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் நாய்கடிக்கு ஆளாகும் நிலையில், இதுபோன்ற நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ