மதுரையில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணித்த 9ம் வகுப்பு பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழைய விளாங்குடி பகுதியை சேர்ந்த தனசேகரன் – உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன், ரோகித் 2 மகன் உள்ளனர். இந்த நிலையில், பெரிய மகன் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான பிரிட்டோ பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறான்.
இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டு வந்த போது, அரசு பேருந்தில் கூட்டமாக இருந்ததால் விளாங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு பேருந்தில் கூட்டமாக ஏறினர். படிக்கட்டில் தொங்கியபடி வந்த பள்ளி மாணவர்கள் குரு தியேட்டர் அருகே பேருந்து வந்த போது பிரபாகரன் தவறி கீழே விழுந்ததில், அரசு பேருந்தின் டயர், மாணவர் மீது ஏறி இறங்கியதில் பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த மாணவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். வரும் வழியிலேயே மாணவன் உயிரிழந்தார். வறுமை நிலையில் மாணவனை படிக்க வைக்க பள்ளிக்கு அனுப்பி வைத்த குடும்பம் இன்று அவர் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு கதறி அழும் காட்சி காண்போரையும் கண்ணீர் வரவழைத்தது.
பள்ளி மாணவன் பிரபாகரன் பேருந்து படிக்கட்டில் பயணித்தபோது தவறி விழுந்து குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.