டாஸ்மாக்கில் டேபிள் மேட்டின் பைக்கை திருடிய இளைஞர் ; சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உதவி கோரும் நபர்!!
Author: Babu Lakshmanan5 January 2023, 8:33 am
மதுபானக்கடையில் எதிரே அமர்ந்து மது குடித்த நபரின் பைக்கை இளைஞர் ஒருவர் திருடிச் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர்,, புத்தாண்டை கொண்டாடுவதற்காக பாண்டிகோவில் அருகேயுள்ள மதுபான கடை ஒன்றில் மதுகுடிக்க வந்துள்ளார். அப்போது தனது பைக்கை மதுபான கடையின் வெளியே நிறுத்திவைத்துவிட்டு அங்குள்ள மதுபானக்கடையில் மது அருந்தியுள்ளார்.
அப்போது அவருடைய இருக்கைக்கு எதிராக அமர்ந்து மது அருந்திய இளைஞர் ஒருவர் கருப்பையாவுடன் நன்கு பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து, திடீரென்று வெளியில் செல்வதாக புறப்பட்டுவிட்டார். இதனையடுத்து, கருப்பசாமி சிறிதுநேரம் கழித்து தான் வாகனத்தை நிறுத்திய இடத்தில் தேடியபோது வாகனம் காணாமல் போயிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கருப்பசாமி சில நிமிடங்களில் மதுபானக்கடையில் இருந்த சிசிடிவியை பார்த்தபோது, தனது எதிரில் மது அருந்திகொண்டிருந்த இளைஞர் பைக்கை எடுத்துசெல்வது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மாட்டுத்தாவணி காவல்நிலையத்தில் இளைஞர் கருப்பசாமி புகார் அளிக்க சென்றபோது காவல்துறையினர் இதுவரை புகார் ஏற்கவில்லை. இந்த நிலையில் பைக் திருடப்பட்ட சிசிடிவி காட்சிகளை சமூகவலைதளங்களை வெளியிட்டு தனது பைக்கை தேடிவருகிறார் கருப்பையா.