சினிமா பாணியில் டீக்கடை உரிமையாளர் கடத்தல்… கண்மாயில் வீசிச் செல்லப்பட்ட சடலம் ; மதுரையில் பயங்கரம்!!

Author: Babu Lakshmanan
29 August 2023, 9:44 am

மதுரை செக்கானூரணி அருகே டீக்கடை உரிமையாளரை ஆட்டோவில் கடத்தி சென்று படுகொலை செய்து உடலை கண்மாயில் வீசிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை செக்கானூரணி அருகே உள்ள நடுமுதலைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (60). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க சென்ற கருப்பையாவை வழிமறித்த கும்பல், அவரை ஆட்டோவில் கடத்தி சென்று பன்னியான் என்ற கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று, அங்கு அவரை வெட்டிப்படுகொலை செய்து உடலை கண்மாயில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

இச்சம்பவம் குறித்து அறிந்த செக்காணுரனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடலை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலைக்கான காரணம் குறித்தும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முன்பகை காரணமாக கருப்பையா கொலை செய்யப்பட்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா..? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 404

    0

    0