வாரிசு, துணிவால் திரையரங்குகளுக்கு வந்த சிக்கல்… 15 நாட்களுக்கு கெடு விதித்த மாவட்ட ஆட்சியர்!!

Author: Babu Lakshmanan
20 January 2023, 5:47 pm

வாரிசு , துணிவு திரைப்படங்களை நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்களை 11, 12, 13 மற்றும் 18 ஆகிய 4 நாட்களில் காலை 9.00 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கி அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து கடந்த 11ஆம் தேதியன்று நள்ளிரவு மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளதாக கூறி மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளும் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து இக்குறிப்பாணை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி தங்களது திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!