அத்திப்பட்டி ஊர் போல அடிப்படை வசதிகளே இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.. ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்..!!

Author: Babu Lakshmanan
12 December 2022, 4:58 pm

நடிகர் அஜித் படத்தில் வரும் அத்திப்பட்டி போல அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகிறோம் என மதுரையில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் தோடனேரி ஊராட்சிக்கு உட்பட காலணி புதூரை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது :- 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலணி புதூரில் வசித்து வருகிறோம்.

இக்கிராமத்தில் குடிநீர், சாலை, சமுதாய கூடம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பல முறை தமிழகத்தின் 2 ஆம் அத்திப்பட்டி போல வாழ்த்து கொண்டு இருக்கிறோம், என கூறினர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 529

    0

    0