உங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சு என்ன செஞ்சீங்க.. எம்பிக்கு எதிராக கண்டா வரச் சொல்லுங்க போஸ்டர்!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2024, 7:13 pm

கண்டா வர சொல்லுங்க மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக வண்டியூர் பகுதியில் பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை வண்டியூர் பகுதியில் கண்டா வரச் சொல்லுங்க…! என்ற வாசகத்துடன் வண்டியூர் , சௌராஷ்டிராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சுவரொட்டியில் மதுரை பாராளுமன்ற தொகுதியில், இரண்டு முறை எம்.பி யாக வெற்றி பெற்றும், வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத மதுரை எம்.பி

திரு. சு.வெங்கடேசன் அவர்களே! உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு, இதுவரை நீங்கள் செய்தது என்ன? இப்படிக்கு
வண்டியூர் கிராம பொதுமக்கள் என அச்சிடப்பட்டு வண்டியூர் பகுதி முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளது.

மதுரை வண்டியூர் பகுதிகளில் தற்போது சாலைகள் சேதமடைந்து பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் பகுதிக்கு வரவில்லை எனக்கொரு நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Madurai MP Su Venkatesan

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசுக்கு எதிராக இலவச பட்டா கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் 3000 க்கும் மேற்பட்ட பெண்களை பேரணியாக அழைத்து வந்து மனு அளித்த நிலையில் சு.வெங்கடேசனுக்கு எதிராக திடீரென கண்டா்வரச்சொல்லுங்க என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே உள்ள கருத்து மோதலை வெளிப்படுத்துகிறதா? என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது

பொதுமக்கள் பெயரில் நோட்டீஸ் ஒட்டியது திமுகவினரா? என்ற சந்தேகத்தில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி