பெண் காவலரின் வீடு புகுந்து தாக்குதல்.. கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் ; அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

Author: Babu Lakshmanan
7 February 2024, 4:34 pm

மதுரையில் கஞ்சா போதையில் பெண் காவலரின் வீட்டுக்குள் புகுந்து கும்பலாக இளைஞர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மருதூரை சேர்ந்தவர்
கருப்பணன் என்பவரின் மகன் ராஜாங்கம். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பூமினாதன் மகன் வினோத்துக்கும் கிராமத்து பணம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. ராஜாங்கம் ஏற்கனவே மேலூர் போலீசில் புகார் கொடுத்து வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக கும்பல் ஒன்று ராஜாங்கத்தினுடைய வீட்டுக்கு சென்று ராஜாங்கத்தின் சகோதரர் அசோக் மற்றும் அசோக்கின் மகன் விஜய்
ஆகியோரை தாக்க முயன்றுள்ளது. அப்போது, தப்பி ஓடி அருகிலுள்ள அருவுகம் என்பவரின் வீட்டுக்குள் விஜய் தஞ்சம் புகுந்தார். கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த கும்பல், விரட்டி சென்று அருவுகத்தின் வீட்டை இரும்பு கம்பியால் தாக்கி உடைத்து உள்ளே புகுந்து வீட்டினுள் இருந்தவர்களை தாக்கி விட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் விஜய், அருவுகம், பூமாதேவி, கிருஷ்ணலீலா, சுந்தர் , சுகுமாரன் ஆகிய 6 பேர் காயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அருவுகம் கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரை சேர்ந்த வினோத், சுந்தரபாண்டி, பீஷ்மர், கண்ணன், தீபன்,வருன், ராஜேந்திரன், காளியம்மாள், லதா மற்றொரு சுந்தரபாண்டி ஆகிய 10 பேர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு சட்ட பிரிவுகளில் மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி