எதிர்ப்பையும் மீறி காதல்… அக்கா மற்றும் காதலனை கொன்ற தம்பி ; தலையை துண்டித்து நாடக மேடையில் வைத்ததால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 6:50 pm

மதுரை அருகே எதிர்ப்பை மீறி காதலித்த அக்காவையும், அவரது காதலனையும் வெட்டிக் கொலை செய்த தம்பி காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்திபெருமாள் மகன் சதீஷ்குமார்(28). சதீஷ்குமார் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அழகுமலை என்பவரது மகள் மகாலட்சுமியை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதே சமயத்தில் மகாலட்சுமிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்த ஒரு வாரத்தில் மகாலட்சுமி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். அதிலிருந்து சதீஷ்குமார், மகாலட்சுமி இருவரும் அடிக்கடி போனில் பேசி தங்களது நட்பை தொடர்ந்துள்ளனர். இந்த விபரம் தெரிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் (20) இருவரையும் அடிக்கடி கண்டித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வேலை முடித்து கொம்பாடியில் தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் செல்லும்போது, வழிமறித்த பிரவீன்குமார், அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டியதில் தலை துண்டானது. துண்டான தலையை நாடக மேடையில் வைத்து விட்டு ஆத்திரம் தீராத பிரவீன்குமார் நேராக வீட்டிற்கு சென்று, அக்கா மகாலட்சுமி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தடுக்க வந்த தாய் சின்ன பிடாரியின் கையை துண்டாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் அண்ணன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கூடக்கோவில் போலீசார், இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கைதுண்டான சின்ன பிடாரியை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் சரக டிஎஸ்பி வசந்தகுமார் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் பார்வையிட்டார். பின்னர், கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பிரவீன்குமாரை 2 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், பிரவீன் குமார் கூடகோவில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், கொலை குறித்து வேறு ஏதும் காரணம் உள்ளதா..? என்று கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 445

    0

    0