‘யாரு படம் ஓடினாலும் ஹீரோ நாங்க தான்’… கார் டேஸ்போர்டில் அமர்ந்து இளைஞர்கள் செய்த அட்ராசிட்டி ; வைரலாகும் வீடியோவால் சர்ச்சை!!

Author: Babu Lakshmanan
21 April 2023, 11:33 am

மதுரை ; மதுரையில் ஆடம்பர காரில் முன்பாக டேஸ் போர்டில் அமர்ந்து கொண்டு பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வைகை ஆற்று கரையோரத்தில் தெப்பக்குளம் பகுதியில் இருந்து விரகனூர் ரிங் ரோடு வரைக்கும் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை போல அமைக்கப்பட்ட இந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் மற்றும் வாகனம் நடமாட்டம் குறைவாக இருப்பதால், அந்த சாலையில் ஏராளமான இளைஞர்கள் பைக் ரேஸ்சில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்ஸ்டா பக்கம் ஒன்றில் தெப்பக்குளம் வைகையாற்று கரையோர சாலையில் இளைஞர்கள் சிலர் கட்சி கொடி பொருத்திய கார் ஒன்றில் டேஷ் போர்டில் அமர்ந்து கொண்டு அட்ராசிட்டி செய்வதோடு, முன்னால் 10 பைக்குகளை ஊர்வலமாக சென்று பைக் ரேஸ் ஈடுவது போன்ற காட்சிகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் பகுதியில் நத்தம் சாலை தெப்பக்குளம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளிலும் நாளுக்கு நாள் பைக் ரேஸ் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் அதனைப் பார்க்கக்கூடிய மற்ற இளைஞர்களும் இது போன்ற பைக் ரேஸ் ஈடுபடுவதும், அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர்.

https://player.vimeo.com/video/819747491?h=ba979e5d23&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

எனவே, போக்குவரத்து காவல்துறை சமூக வலைதள பக்கங்களை கண்காணித்து இது போன்ற வீடியோக்களை பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 399

    0

    0