சாலையில் மீண்டும் பைக்கில் வீலிங்…. லுங்கி பாய்ஸ் அட்டகாசம் ; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.!!

Author: Babu Lakshmanan
11 March 2024, 2:58 pm

மதுரை மாநகர் வைகை கரையோர சாலையில் மீண்டும் பைக்கில் வீலிங் செய்து இளைஞர்கள் அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய வைகை கரையோர சாலை மற்றும் நத்தம் மேம்பாலம் பகுதியில் அவ்வபோது இளைஞர்கள் பைக் ரேஸ் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அவ்வப்போது சாலை விபத்துக்கள் ஏற்படுவதால், இதை தவிர்க்கும் வகையில் மாநகர காவல் துறை சார்பாக நத்தம் மேம்பாலம் மற்றும் வைகை கரையோர சாலை பகுதியில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்த காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மதுரை மாநகர் தெப்பக்குளம் முதல் ஐராவதநல்லூர் வரை உள்ள வைகை கரையோர சாலை பகுதியில் வாலிபர்கள் சிலர் பைக்கில் அதிக வேகமாக சென்று, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மேலும், லுங்கி அணிந்தபடி சினிமா பாடலுக்கு இருசக்கர வாகனத்தில் நின்றபடி நடனமாடிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்

  • samantha refused to act in sudha kongara movie சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே