‘சிவாங்கா’ யாத்திரைக்கு படையெடுக்கும் பக்தர்கள்..கோவையில் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி.!

Author: Selvan
16 February 2025, 5:22 pm

ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென்கைலாய பக்தி பேரவை நடத்தும் ஆதி யோகி ரத யாத்திரை கோவையில் வெகு விமர்சியாக நடக்கிறது.இதில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்,வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் 42 நாட்கள் விரதம் இருந்து தென்கைலாய என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறி,அங்குள்ள சிவன் சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருவார்கள்.

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் இந்த சிவாங்கா யாத்திரை,ஆதி யோகி யாத்திரையோடு இணைந்து பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.இந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்து தங்களுடைய விரதத்தை ஆரம்பித்து விடுகின்றனர்.இந்த யாத்திரையில் பக்தர்களுக்கு இரு வேளை உணவு,யோகா பயிற்சி,ஆன்மீக சார்ந்த நல்ல கருத்துக்களை வழங்கி வருகிறார்கள்,பக்தர்கள் தங்களுடைய வேலை,குடும்பம்,ஆசை,பணம் எல்லாவற்றையும் துறந்து தன்னையே அந்த சிவனிடம் அர்ப்பணித்து,இதில் முழு ஈடுபாட்டுடன் பயணிக்கிறார்கள்.

இதில் பக்தர்கள் 20 நாட்களுக்கு மேலாக பாத யாத்திரை மேற்கொண்டு இந்த பயணத்தை மேற்கொள்ளுகிறார்கள்,மேலும் 7 மலைகளை கொண்டுள்ள தென்கைலாய என்றழைழைக்கப்டும் வெள்ளியங்கிரியில் கடினமான மலை பாதை ஏறி,அங்குள்ள சிவனை தரிசனம் செய்து இறங்குகின்றனர்.அதுமட்டுமில்லாமல் பெப்ரவரி 26ஆம் தேதி சத்குரு நடத்தும் மஹாசிவராத்திரி நிகழ்விலும் பங்கு பெறுகின்றனர்,இதனால் பக்தர்கள் உச்சகட்ட இறையருளை இதன் மூலம் பெறுகின்றனர்.

  • GV Prakash and Saindhavi Divorce ஜிவி பிரகாஷ் உடன் கள்ளக்காதலா? சைந்தவிக்கு ஸ்கெட்ச்? பிரபல நடிகை பகீர்!
  • Leave a Reply