மகாளய அமாவாசை.. முக்கடல் சங்கமிக்கும் குமரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்த கூட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan2 October 2024, 11:44 am
மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கன்னியாகுமரியில் கூட்டம் குவிந்தது.
ஆடி, தை அமாவாசை தினங்கள் மற்றும் மாகாளய அமாவாசை நாளில் கடல் மற்றும் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மகாளய அமாவாசை தினமான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடலில் ஏராளமானோர் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு எள், பச்சரிசி, தர்ப்பை போன்றவை கொண்டு வேத விற்பன்னர்களிடம் திதி கொடுத்து வருகின்றனர்.
மகாளய அமாவாசையை ஒட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையும் படியுங்க: நான் கனிமொழி எம்பி., உதவியாளரின் தம்பி.. கோவை போலீசை மிரட்டிய போதை இளைஞர்..!!
அதிகமான பக்தர்கள் கடலில் புனித நீராடி வருவதால் கன்னியாகுமரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.