டிரம்ப் கணக்கு தவிடுபொடி.. பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவு : பல லட்சம் கோடி இழப்பு!
Author: Udayachandran RadhaKrishnan4 April 2025, 11:29 am
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
அமெரிக்கா மீது மற்ற நாடு அதிக வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப இந்திய உள்பட் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரியை அறிவித்தார்.
இதையும் படியுங்க: உதயநிதியும், ஆ ராசாவும் விரைவல் கம்பி எண்ணுவார்கள் : இது ஹெச் ராஜா கணக்கு!
இந்தியா மீது மட்டும் 27 சதவீத வரியை விதித்தார். பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் கூட கூடுதல் வரியை டிரம்ப் விதித்தார். இதையடுத்து அமெரிக்க பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன.
அமெரிக்க நாட்டு பங்குச்சந்தைகள் கடும் வீழச்சியடைந்தது. அனைத்து நிஃப்ட் உள்ளிட்ட குறியீடுகள் 1400 புள்ளிகள் சரிந்ததால் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

இது குறித்து டிரம்பிடம் கேட்கப்பட்ட கேள்விக்க, இது எதிர்பார்த்ததுதான், ஆனால் விரைவில் ஏற்றம் கண்டு எழுச்சியடையும், நாடு ஏற்றம் பெறப்போகிறது.
ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்று செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த சிகிச்சை நன்றாக போய்கொண்டிருப்பதாக கூறினார்.