ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை சேர்ந்த லூயிஸ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
லூயிஸ் குண்டக்கல்லுவில் கால் சென்டர் நடத்தி வருகிறார். அவர்கள் மூவரும் சேர்ந்து எளிதாக பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி பெண்களின் வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களுக்கு விற்பதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்தனர்.
இதற்காக அப்பாவிப் பெண்களைப் தேடி பிடிக்கத் தொடங்கினர். மேலும் கால் சென்டருக்கு வரும் பெண்களை ஏமாற்றும் வார்த்தைகளால் கணேஷும், ஜோஸ்னாவும் பேசி பெங்களூரில் பெண்களைப் பிடிப்பது வழக்கம்.
பின்னர் குந்தக்கல்லியில் ஒரு ஸ்டுடியோவை வைத்து தங்கள் வலையில் விழுந்த பெண்களுடன் நிர்வாண வீடியோக்களை எடுப்பார்கள். இந்த வீடியோக்களை சைப்ரஸை தளமாகக் கொண்ட Xampster என்ற ஆபாச வலைத்தளத்துடன் இணைந்தனர்.
இந்த ஆபாச தளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் URL இணைப்புகள் வழியாக பெண்களின் நிர்வாண வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களுக்கு அனுப்பி வந்தனர். அவர்கள் இந்த வலைத்தளத்தில் லைவ் வீடியோக்களையும் வெளியிட்டனர்.
பெண்களின் நிர்வாண வீடியோக்களையும் லைவ் நிர்வாண வீடியோக்களையும் பதிவேற்றி நிறைய பணம் சம்பாதித்து வந்தனர். இவர்கள் குறித்து கிடைத்த தகவலால் சைபர் பாதுகாப்பு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து ஆந்திர மாநில அரசு சைபர் குற்றங்கள், போதை பொருட்கள் கடத்தல் மீது தனி கவனம் செலுத்தி வரும் கருடா தனிப்படை ஐ.ஜி. ரவிகிருஷ்ணா தலைமையிலான போலீசார் குந்தக்கல்லில் இருந்து கால் செண்டர் என்ற பெயரில் பணத்திற்காக பெண்களை ஏமாற்றி, அவர்களின் நிர்வாண வீடியோக்களை லைவ் ஒளிபரப்ப செய்ய ஸ்டுடியோவை அமைத்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்கனவே Xampster ஆபாச வலைத்தளத்தில் பல வீடியோக்களையும் பெண்களுடன் லைவ் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டுள்ளது கண்டுபிடித்தனர். போலீஸ் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட கணேஷ், ஜோஸ்னா மற்றும் லூயிஸ் ஆகியோர் தடைசெய்யப்பட்ட ஆபாச வலைத்தளத்தில்
பெண்களில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்ததாக தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட கணேஷ் மற்றும் ஜோஸ்னா ஆகியோர் ஆபாச வீடியோக்கள் மூலம் ₹ 16 லட்சமும், லூயிஸ் ₹ 11 லட்சமும் சம்பாதித்ததை சைபர் பாதுகாப்பு போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்தப் பணம் கிரிப்டோகரன்சியாக வரும். இந்தப் பணம் சைப்ரஸை தளமாகக் கொண்ட டெக்னோயிஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் இவர்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
பெண்களின் நிர்வாண வீடியோக்களையும், பெண்களுடன் நிர்வாண லைவ் நிகழ்ச்சிகளையும் ஆபாச வலைத்தளங்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் அதிகமாக சம்பாதித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதுகுறித்தும் கூடுதலாக, இந்த கும்பலிடம் எத்தனை பெண்களை சிக்க வைத்து நிர்வாண வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளது என்பதைக் கண்டறியும் பணியில் கருடா தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இதற்காகவே சைபர் கிரைம் குழுக்களை வலுப்படுத்துகிறோம் . சைபர் குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உள்ளது.
மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக ஊடகங்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு ஐ.ஜி.ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.