ஆட்சியர் அலுவலகத்துக்கு கொலுசுடன் வந்த மநீம கட்சியினர்: திமுக வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்..!!

Author: Rajesh
18 February 2022, 6:02 pm

கோவை: கோவையில் வாக்காளர்களுக்கு திமுக கொடுத்த கொலுசு மற்றும் டோக்கனுடன் வந்த மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் நேற்று பிரச்சாரங்களை நிறைவு செய்தனர். இந்நிலையில் திமுகவினர் ஓட்டுக்கு பணம், பொருள், அன்பளிப்பு ஆகியவை கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் திமுகவினர் வாக்காளர்களுக்கு கொலுசு கொடுத்ததாக மக்கள் நீதி மய்யதினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொலுசுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு புகார் தெரிவித்தனர். மேலும் திமுக வேட்பாளர்கள் பல இடங்களில் வாக்காளர்களுக்கு டோக்கன்களை வழங்கி பணத்தை பெற்றுக் கொள்ள அழைப்பதாகவும், எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாக வழங்குகின்றனர் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டுமெனவும், இல்லையென்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?