கடைசில அவர் வாயாலே சொல்ல வச்சிட்டாங்க.. மாளவிகா மோகன் open talk..!

Author: Rajesh
22 May 2022, 11:08 am

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்திலும் நடித்தார். அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார்.

மாளவிகா மோகனன் என்றாலே போட்டோஷுட் தான் எல்லோர் நினைவிற்கும் வரும். அந்த அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பாலோயர்ஸ் ஏராளம். ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் கேள்விக்கு பதிலளித்து உரையாடி வந்தார் மாளவிகா.

அப்போது, ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனிடம் மாறன் படம் குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதில் அவர், ‘மாறன் படத்தில் படுக்கை அறை காட்சி எத்தனை முறை எடுத்தீர்கள்?’ என கேள்வி கேட்டிருந்தார்.

இந்த ட்வீட்டை பார்த்த மாளவிகா மோகனன், ‘உங்கள் மண்டைக்குள் இருப்பது மிக மோசமான இடம்’ என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் தற்போது மற்றொரு ரசிகர் நீங்கள் திறமையான நடிகை எல்லாம் கிடையாது.

அது உங்களுக்கே தெரியும். மாளவிகாவின் ரசிகர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் நீங்கள் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்காக மட்டும்தான் உங்கள் ரசிகர் என கூறிக் கொள்கிறார்கள் என பதிவிட்டிருந்தார்.

அதற்கு மாளவிகா மோகன் எனக்கும் அது தெரியும், அப்படி என்றால் நீங்களும் என்னுடைய புகைப்படத்தை பார்ப்பதற்காக தான் வந்தீர்களா என அவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். இவ்வாறு நடிகைகளை விமர்சிக்கும் ரசிகர்களுக்கு தற்போது தைரியமாக அந்த நடிகைகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 729

    0

    0