வனப்பகுதியில் சடலமாக கிடந்த காட்டுயானை: ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்…பொதுமக்களுக்கு அலர்ட்..!!

Author: Rajesh
17 March 2022, 6:19 pm

கோவை: மாங்கரை பகுதியில் காட்டுயானை ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்திருப்பது வனத்துறையினரால் கண்டறிப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மாங்கரை வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்ததுள்ளது வனத்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்த ஆண் யானைக்கு 30 வயது இருக்க கூடும் என்றும் ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து வனத்துறை உயரதிகாரிகள், வன அலுவலர், வனவிலங்கு மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் யானை உயிரிழந்த இடத்திற்கு சென்றுள்ளனர். யானை உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்பே உயிரிழப்பிற்கான சரியான காரணம் தெரியவரும்.

ஆந்தராக்ஸ் நோயால் உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுவதால் அப்பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க காவல்துறையினர் தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!