பத்திரப்பதிவில் முறைகேடு? சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2023, 4:34 pm

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் 100கணக்கான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று திடீரென 3வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று பத்திரபதிவிற்காக கொண்டு வரப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அண்மையில் நடைபெற்று முடிந்த பத்திரப்பதிவுகள் தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கோடி கணக்கிலான மதிப்பிலான பல இடங்கள் பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ள நிலையில் அது தொடர்பான ஆவணங்களையும், பத்திரப்பதிவு செய்தவர்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

பத்திரப்பதிவு செய்தவர்கள் விவரங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனை காரணமாக செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி