பிரபல தனியார் பள்ளியில் மாணவர்கள் செலுத்தும் கல்வி கட்டணத்தில் கையாடல்.. ரூ.26 லட்சத்தை ஏப்பம் விட்ட பெண் பணியாளர்!

Author: Udayachandran RadhaKrishnan
29 மே 2024, 1:11 மணி
School
Quick Share

வேலூர் தொரப்பாடி எழில்நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் வேலூர் சாய்நாதபுரம் கலைவாணர்நகரை சேர்ந்த செல்வி (வயது 41) கடந்த 2017 ஆம் ஆண்டு தட்டச்சராக பணியில் சேர்ந்துள்ளார்.

சுமார் 6 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அவர் காசாளர் (வேலம்மாள் போதி கேம்பஸ்) பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் செலுத்தும் கல்வி கட்டணத்தை செல்வி பெற்றுக்கொண்டு அதற்கான ரசீது வழங்கி, மறுநாள் அந்த பணத்தை சென்னையில் உள்ள பள்ளியின் அலுவலக வங்கிக்கணக்கில் வரவு வைப்பது வழக்கம்.

ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 3 – ம் தேதி வரை மாணவர்களின் கல்வி கட்டண ரசீது மற்றும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்துள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகத்தின் தணிக்கை குழுவினர் வேலூரில் உள்ள பள்ளியில் மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டண ரசீது, வங்கியின் வரவு உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ததில் காசாளர் செல்வி, மாணவர்களின் கல்வி கட்டணம் ரூ.26 லட்சத்து 90 ஆயிரத்து 127 க்கு ரசீது வழங்கி விட்டு அதனை வங்கிக்கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தணிக்கை குழுவினர் செல்வியிடம் விசாரணை நடத்தி, கையாடல் செய்த பணத்தை விரைவாக செலுத்தும்படி கூறினார். ஆனால் அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

மேலும் படிக்க: மீண்டும் பிரதமர் மோடியா? நிருபர்கள் கேட்ட கேள்வி : ரஜினி சொன்ன பதில்.. கட்சியினர் உற்சாகம்..!!

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் (ரதிகுமாரி) வேலூர் மாவட்ட Sp மணிவண்ணனிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில். பள்ளியில் காசாளராக பணிபுரிந்த செல்வி, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தனது வங்கிக்கணக்கு எண்ணை கொடுத்து அதன்மூலமும், பள்ளியில் செலுத்திய பணத்தை வங்கிக்கணக்கில் வரவு வைக்காமலும் ரூ.26 லட்சத்து 90 ஆயிரத்து 127 ஐ கையாடல் செய்ததும், அந்த பணத்தில் சுற்றுலா சென்றதும், வாங்கிய கடனை அடைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

  • Vanathi தமிழிசை மீது தரம்தாழ்ந்த விமர்சனம்.. திருமா மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் DEMAND!
  • Views: - 471

    0

    0