வெற்றி கொண்டாட்டத்துக்கு ரெடியான மாரி செல்வராஜ்: உதயநிதி நடிக்கும் படத்தின் டைட்டில் ‘மாமன்னன்’…!!

Author: Rajesh
4 March 2022, 11:48 am

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படத்திற்குக் கிடைத்த வெற்றி காரணமாகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர், அடுத்தாக பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்படத்திற்கு முன் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான முதற்கட்ட பணியையும் அவர் தொடங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ‘மாமன்னன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் படக்குழு டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் பெரிய கல்லுக்கு கீழே மாடுகள், காக்கைகள் மேலும் கீழுமாக பார்ப்பதை பார்த்த ரசிகர்கள் மாரி செல்வராஜூம் உதயநிதியும் பலமான சம்பவத்திற்கு தயாராகிவிட்டார்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…