இயக்குனர் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாமன்னன் பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி நடித்து வெளியான மாமன்னன் திரைப்படம் இன்று திருநெல்வேலியில் நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக கூறி படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்தனர்.
படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் திருநெல்வேலி ராம் – முத்துராம் திரையரங்கு முன்பாக மாமன்னன் பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகத்தினர், அதன் நிர்வாகி பவானி வேல்முருகன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்தை தடை செய்ய வலியுறுத்தியும், இயக்குனர் மாரி செல்வராஜை கைது செய்ய கோரியும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உட்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக பவானி வேல்முருகன் கூறுகையில்:- தென் தமிழகத்தில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது மூலம் ஜாதி கலவரம் தூண்டப்படுகிறது. முதலமைச்சரே இதற்கு ஆதரவாக உள்ளது போல் தெரிகிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் குளத்தூர் வாக்குகளை இழக்கும் நிலை ஏற்படும், என்று தெரிவித்தார்.
முற்றுகை போராட்டம் காரணமாக காவல்துறை துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.