நடத்தையில் சந்தேகம்… பிரிந்து வாழும் மனைவி மீது ஆசிட் வீச்சு… சமாதானப் பேச்சு சண்டையில் முடிந்ததால் கணவர் வெறிச்செயல்!!

Author: Babu Lakshmanan
30 June 2022, 1:56 pm

வேலூர் அருகே தனியே பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியின் மீது கணவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கொண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலு (59), நிஷா (31) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்து, 10 மற்றும் 7 வயதில் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனிதனியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கணவர் மனைவியை சந்தித்து பேச வந்துள்ளார். அப்போது, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால், அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு மனைவி வீட்டிற்கு வந்த வேலு, கையில் மறைத்து வைத்து ஆசிட்டை எடுத்து வந்ததாகவும், மனைவி எதற்கு இங்கு வந்தாய் என கேட்டதால் ஆத்திரமடைந்த வேலு, கையில் வைத்து இருந்த ஆசிட்டை மனைவியின் மீது வீசியுள்ளார்.

இதனால், உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்ட மனைவி நிஷாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தனர் ஓடிவந்து வலியால் துடித்து கொண்டு இருந்த நிஷாவை மீட்டுள்ளனர். பின்னர், தகவலறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர், அவரை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, நிஷா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிர் கணவர் வேலுவை வேப்பங்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 1130

    0

    0