காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் எனக் கூறி பணம் கேட்டு பெற முயன்ற வழக்கில் புதுக்கோட்டையை சேர்ந்த சந்தான பாரதி என்பவரை காஞ்சிபுரம் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் இயங்கி வரும் பிரபல பட்டு ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்கேபி.கோபிநாத் என்பவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேசுவதாகவும், சற்று இருங்கள் எனக் கூறிய நிலையில் வேறு ஒரு நபர், தான் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு உதவியாளர் எனவும், வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 75 ஆயிரம் பணம் அனுப்புமாறும் அவசர தேவைக்கு தேவைப்படுவதாகவும் கூறி வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த கோபிநாத், இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்தார். இதனை சைபர் க்ரைம் காவல் துறைக்கு மாற்றம் செய்து எஸ்பி டாக்டர் எம். சுதாகர் உத்தரவிட்டு விசாரணை மேற்கொள்ள கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் ராஜகோபால் , சதீஷ் , ஆல்பர்ட் ஜான், ஆசைத்தம்பி குழுவினர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்தானம் என்கிற சந்தான பாரதி ஆள் மாறாட்டம் செய்து தொலைபேசியில் பண உதவி கேட்டது உறுதி செய்யப்பட்டதன் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந் நிலையில் அவர் வேறு ஒரு வழக்கில் தஞ்சாவூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருவது தெரிய வந்தது. எனவே மீண்டும் அவரை இவ்வழக்கில் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் தஞ்சாவூர் சிறையில் அடைத்தனர். சந்தானம் என்கிற சந்தானபாரதி, இதே போல் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் பெயரை கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.