ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நோயை பரப்புவதாக Whatsapp Status வைத்த நபர்… தகவல் அறிந்து போலீசார் எடுத்த ஆக்ஷன்…!!
Author: Babu Lakshmanan6 October 2022, 12:33 pm
பழனியில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் போலியான தகவலை பரப்பிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் சாதிக் அலி. இவர் நேற்று முன்தினம் அவரது செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்திருந்தார். தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த அந்த லெட்டர்பேடில், யாராவது உங்கள் வீட்டின் வாசலுக்கு வந்து மருத்துவக் கல்லூரியில் இருந்து வருகிறோம். உங்களுக்கு இலவசமாக சுகர் டெஸ்ட் எடுக்கிறோம் என கூறினால் அவர்களை விரட்டி அனுப்புங்கள்.
அல்லது காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்றும், அவர்கள் ஹிந்து, ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்பினால் எய்ட்ஸ் வைரஸை பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர்கள். எனவே, இதை பார்த்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்த லெட்டர் பேடில் இப்படிக்கு தமிழ்நாடு காவல்துறை என சீல் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலறிந்த காவல்துறையினர் சாதிக் அலியை பிடித்து விசாரணை செய்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு போல போலியான லெட்டர்பேடு வைத்த சாதிக்அலி மீது மத வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் தகவல் பரப்பியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சாதிக் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும். இது போன்ற வன்முறையை தூண்டும் வகையில் உள்நோக்கத்துடன் பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர். இச்சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0
0