தாய் இல்லாமல் பாட்டியிடம் வளர்ந்த சிறுமி: பல வருடங்களாக சீரழித்த சித்தப்பா: உடந்தையாய் இருந்த தந்தை….!!

Author: Sudha
17 August 2024, 5:11 pm

சிதம்பரம் அருகே பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் சித்தப்பாவும், உடந்தையாக இருந்த அப்பாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி இறந்து விட்ட நிலையில், 13 வயது மகளும், 14 வயது மகனும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர்.

சிறுமியின் சித்தப்பா ஆனந்த ஜோதி, சிறுமியை அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதை சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தும், அவர் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

இதுகுறித்து சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்து, அவர் சென்னையில் உள்ள உறவினரான ஜெயப்பிரதாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், சிறுமியை அவருடைய சித்தப்பா தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், சிறுமியின் தந்தையையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக உறவினர்கள் ரேவதி, பிரேமா, வனஜா ஆகிய மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 228

    0

    0