உப்பு போட்டு தான் திங்கறீங்களா.. கனிமொழி எம்பி, அமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு.. வறுத்தெடுத்த நபர் கைது..!

Author: Vignesh
3 July 2024, 6:12 pm

கனிமொழி எம்பி, அமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவரை போலிசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் யானை சாலை தெருவைச் சேர்ந்தவர் சங்கரநயினார் மகன் மணிகண்டன் (35), இவர் தனது முகநூலில் கனிமொழி எம்பி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் குறித்து அவதூறாக பதிவு செய்திருந்தாராம்.
இதுகுறித்து திமுக ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் அகமது விஷால் (26) என்பவர் ஏரல் காவல்நிலத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

https://www.youtube.com/watch?v=7_ly9APBkAw
  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!