வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை: போலீசார் திடீர் ரெய்டு…1.2 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

Author: Rajesh
10 April 2022, 4:43 pm

திருவள்ளூர்: பழவேற்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்துவருவதாக வந்த புகாரின் பேரில் திருப்பாலைவனம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், குளத்துமேடு பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன்
கணேசன் தனது வீட்டின் அருகே கஞ்சா விற்பனை செய்தபோது அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, திருப்பாலைவனம் போலீசார் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பின்னர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Sandakozhi movie facts சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu