பல்பு மாட்ட வந்த பாலமுருகன்.. அலறிய 78 வயது மூதாட்டி : மிரட்டி மிரட்டி வன்கொடுமை செய்த கொடூரம்!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2025, 3:54 pm
கோவை அடுத்த பேரூர் பகுதியை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. இவரது கணவர் இறந்து விட்டார்.பிள்ளைகள் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இதையும் படியுங்க : குட்டிச் சாத்தானை ஏவி மாந்தரீகம்.. திருச்சியை அலற விட்ட ரகு : பல லட்சம் மோசடி செய்து தில்லாலங்கடி!
இவரது வீட்டருகே வசிப்பவர் பாலன் என்ற பாலமுருகன் (41). கூலித் தொழிலாளி. இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பாலன் என்ற பாலமுருகன் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக சென்று விட்டார்.
பல்பு மாட்ட வந்த பாலமுருகன்
இந்நிலையில், பாலன் என்ற பாலமுருகன், மூதாட்டியும் பக்கத்து வீடு என்பதால் பாலமுருகன் சிறு, சிறு உதவிகளை அவ்வப் போது மூதாட்டிக்கு செய்து வந்தார்.
இதேபோல் சில நாட்களுக்கு முன்பு மூதாட்டியின் வீட்டில் பல்பு பீஸ் போனது. இதனைத் தொடர்ந்து மூதாட்டி வேறு ஒரு பல்பை வாங்கினார்.
ஆனால் அவரால் அந்த பல்பை மாட்ட முடியவில்லை. இதனால் கடந்த 22 ம் தேதி இரவில் பாலமுருகன் அழைத்து பல்பை மாட்டித் தருமாறு கேட்டார். வீட்டுக்கு சென்ற பாலமுருகன் பல்பை மாட்டினார்.
மூதாட்டியை மிரட்டி உல்லாசம்
பின்னர் சபலம் ஏற்பட்டு மூதாட்டியின் கைகளை கயிற்றால் கட்டினார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு வெளியே சொல்லக் கூடாது என மிரட்டி விட்டுச் சென்றார். இந்த விஷயத்தை மூதாட்டி வெளியே சொல்லவில்லை.
ஆனால் தொடர்ந்து மூதாட்டிக்கு பாலமுருகன் பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளார். இதனால் பயந்து போன மூதாட்டி இரவில் தனது வீட்டில் படுக்காமல் அருகே உள்ள கோயிலுக்கு சென்று படுத்துக் கொண்டார்.
இதுகுறித்து மூதாட்டியிடும் சிலர் விசாரித்து உள்ளனர். அப்பொழுது அந்த மூதாட்டி மணிகண்டன் அவரிடம் தவறாக நடந்து கொண்ட விதத்தை பற்றி அழுது கொண்டே கூறி உள்ளார்.
இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் பாலன் என்ற பாலமுருகன் கைது செய்தனர். மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.