நரிக்குறவர் இன சிறுமிக்கு பாலியல் தொல்லை: பேன்சி ஸ்டோர் உரிமையாளர் போக்சோவில் கைது!!

Author: Rajesh
21 April 2022, 11:13 pm

புதுச்சேரியில் நரிக்குறவர் இன சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேன்சி பொருட்கள் வியாபாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே சுப்பையா நகரில் பிளாஸ்டிக் பொம்மைகளின் மொத்த விற்பனை கடைகள் உள்ளன.

இங்கு தினமும் காலையில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்கள் பிளாஸ்டிக் பொம்மைகள், ஊசி மணிகள் போன்றவற்றை வாங்கி சென்று சில்லறை விற்பனை செய்வது வழக்கம்.

நேற்று காலை சிறுமி ஒருவர் பொருட்களை வாங்க சங்கர்லால்(42) என்பவரது கடைக்கு வந்துள்ளார். அவரிடம் சங்கர்லால் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பெண்ணின் தாயார் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடை உரிமையாளர் சங்கர்லாலை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!