கோவை : கோவையில் ஒரே நாளில் ஏடிஎம்களில் அடுத்தடுத்து பேட்டரிகள் திருடுபோன வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஏடிஎம்களில் தொடர்ந்து பேட்டரிகள் திருடு போக கூடிய சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் விசாரணை நடத்தி திருடர்களை பிடிக்க தீவிரம் காட்டியுள்ளனர்.இந்நிலையில் வெரைட்டிஹால் பகுதி ஏடி.எம்.ஒன்றில் பேட்டரிகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வெரைட்டி ஹால் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிங்காநல்லூர் பகுதியிலும் பேட்டரி காணாமல் போனது தெரிய வந்தது.ஒரே நாளில் அடுத்தடுத்து பேட்டரிகள் திருடுபோன சம்பவத்தால் போலீசார் ஏடிஎம்களில் முகாமிட்டனர்.
இந்த நிலையில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான போலீசார் பேட்டரி காணாமல்போன வங்கி அதிகாரிகள் தந்த புகாரின் அடிப்படையில் புலனாய்வு செய்த நிலையில் செந்தில் குமார் என்ற நபரை கைது செய்தனர். செந்தில் குமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலீசார் அதிர்ந்து போகும் அளவிற்கு வாக்குமூலம் தந்திருக்கிறார். பேட்டரி திருடுவதற்கு சாதாரணமாக சென்றால் போலீசாரிடம் மாட்டிவிடுவோமென நினைத்து பேட்டரி மெக்கானிக் போன்று ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பட்டப்பகலிலேயே பேட்டரிகளை திருடி இருக்கின்றார்.
பேட்டரிகளை கழட்டும்போது வாடிக்கையாளர்கள் கேட்டால் நான் மெக்கானிக் என்றும் பேட்டரியை சரிசெய்ய வந்து இருப்பதாகவும் தெரிவித்து லாவகமாக பேட்டரியை திருடி பழைய இரும்பு கடையில் விற்று வந்திருக்கிறார். இரவு நேரங்களில் பேட்டரி திருடுவதற்கு ஏடிஎம்களுக்கு சென்றால் போலீஸ் வந்து விடுவோமென்று எண்ணி பேட்டரி திருடும் திருட்டு சம்பவத்தை பட்டப்பகலிலேயே துணிகரமாக நிகழ்த்திய செந்தில்குமார் கோவை ஏடிஎம்களில் பேட்டரிகளை கொள்ளையடித்து இருக்கிறார்.
திருடர்களை பிடிக்க இரவில் போலீசார் ரோந்து செல்கின்ற நிலையில் பட்டப்பகலில் மெக்கானிக் போர்வையில் ஏடிஎம்களில் திருடினால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்கின்ற யுக்தியின கையாண்ட செந்தில் பேட்டரிகளை மட்டுமே குறிவைத்து அதுவும் பட்டப்பகலிலேயே திருடுவது வாடிக்கையான செயலாக கடைபிடித்து வந்ததும் தெரிய வந்தது.பேட்டரிகளை மட்டுமே திருடி போலீசாரிடம் அகப்படாமல் இருக்க செந்தில்குமார் வகுத்த செயல்திட்டம் போலீசையே அதிர செய்திருக்கின்றன. இந்நிலையில், செந்தில்குமாரை சிங்காநல்லூர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.