தேனியில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பர்னிச்சர் கடைக்குள் புகுந்து ஒருவரை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் புதுக்காலணி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் இதே பகுதியில் ஒர்க்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இதே தெருவில் வசித்து வரும் தமிழன் என்ற நபருக்கும் முருகேசனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள போடி நகரின் முக்கிய பகுதியான பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள ஒரு பர்னிச்சர் கடையில், முருகேசன் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். அவர் கடைக்குள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பொழுது, இரு சக்கர வாகனத்தில் கடைக்கு வெளியே 3 பேர் வந்துள்ளனர்.
அப்பொழுது, இருசக்கர வாகனத்தில் இறங்கி வந்த தமிழன் கையில் வைத்திருந்த அரிவாளுடன் கடைக்குள் நுழைந்து முருகேசனின் கை மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிவிட்டார். பின்பு ரத்த காயங்களுடன் இருந்த முருகேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முருகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்பு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடி நகர் காவல் துறையினர் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போடி நகர் காவல் துறையினர் தப்பியோடிய தமிழனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தால் போடி நகர் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அரிவாள் வெட்டில் ஈடுபட்ட தமிழன் என்ற நபர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.