லாட்ஜ் அறையில் நிர்வாணமாக கிடந்த ஆண் சடலம்.. ஓட்டல் பெண் ஊழியரின் திடுக்கிடும் வாக்குமூலம்!

Author: Hariharasudhan
11 December 2024, 2:18 pm

சென்னை தி.நகர் லாட்ஜில் நிர்வாண நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், குமாரப்பா தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (42). இவர் அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி காலை 11 மணி அளவில் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் தியாகராய நகரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

பின்னர் அவர்கள் அங்கு உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அன்று இரவு 7.30 மணியளவில் ஐஸ்வர்யா மட்டும் தனியாக புறப்பட்டு அங்கிருந்து சென்று உள்ளார். இந்த நிலையில், ஓட்டலில் புக் செய்த நேரம் முடிந்துவிட்டதால், டிசம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் லாட்ஜ் ஊழியர்கள் அறையைக் காலி செய்யச் சொல்வதற்காக சென்று உள்ளனர்.

A Man Dead body found in T Nagar Lodge

அப்போது, சுரேஷ் பாபு தங்கியிருந்த அறைக் கதவை ஊழியர்கள் தட்டி உள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் அறை திறக்காததால் விடுதியில் உள்ள மற்றொரு சாவி மூலம் அறையைத் திறந்து பார்த்து உள்ளனர். அப்போது, சுரேஷ் பாபு அறையில் உள்ள கட்டிலில், ஆடைகள் எதுவும் இல்லாமல் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்து உள்ளார்.

இதையும் படிங்க: 4வது கணவரைத் தேடிய பிரியா.. வசமாக சிக்கிய விவசாயி.. லட்சக்கணக்கில் மோசடி!

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக பாண்டிபஜார் போலீசாருக்கு லாட்ஜ் ஊழியர்கள் தகவல் அளித்து உள்ளனர். இதன் பேரில் வந்த பாண்டிபஜார் போலீசார், உயிரிழந்த சுரேஷ் பாபுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கே.கே.நகர் ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Dead body found in Chennai T Nagar Lodge

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுரேஷ் பாபு உடன் தங்கி இருந்த ஐஸ்வர்யாவைப் பிடித்து விசாரித்தனர். இதில், குடும்ப வறுமை காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் சுரேஷ் பாபு வேலை செய்யும் ஓட்டலில் பணிப்பெண்ணாக ஐஸ்வர்யா வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

இந்த நிலையில், சுரேஷ்பாபு அவரிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி விடுதிக்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், அவரது பாலியல் தேவைக்கு பயன்படுத்தி உள்ளார். மாலை இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, அதன்பின் இரவு 7.30 மணிக்கு விடுதியில் இருந்து தான் புறப்பட்டதாகக் ஐஸ்வர்யா கூறியுள்ளார். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!