மனைவியிடம் தகராறு செய்த தம்பி… கட்டையை எடுத்து வெறிகொண்டு தேடிய அண்ணன் : கண்ணில் பட்டவுடன் அரங்கேறிய கொடூரக்கொலை!!

Author: Babu Lakshmanan
27 January 2023, 8:02 pm

ஓட்டப்பிடாரம் அருகே சொத்து பிரச்னை காரணமாக தம்பியை அண்ணன் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இரு மகன்களான பொன்மாடசாமி (30), முத்துராஜ் (26), இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் இருவருக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பின்னர், தம்பி முத்துராஜை அண்ணன் பொன்மாடசாமி கையில் வைத்திருந்த கட்டையால் தலையில் பலமாக அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனை அறிந்த வந்த எப்போது வென்றான் போலீசார் விரைந்து சென்று முத்துராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துனர். மேலும், தப்பி ஓடிய பொன்மாடசாமியை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கீழ ஈரால் பகுதியில் பதுங்கி இருந்ததையடுத்து, போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; தன்னுடன் மது மற்றும் கஞ்சா போதையில் தனக்கு வீட்டில் பங்கு வேண்டும் என்று அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம், அதன்படி, நேற்று இரவு முத்துராஜ் பொன்மாடசாமி வீட்டிற்கு சென்று மனைவி முத்துமாரியிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டில் உள்ள டிவி கதவு உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொன் மாடசாமி வீட்டில் உள்ள கட்டையை எடுத்து முத்துராஜ் என்பவனை தேடி வந்த நிலையில், அதே பகுதியியை சேர்ந்த செல்வபாண்டி என்பவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பொன்மாடசாமி கையில் வைத்திருந்த கட்டையால் சரமரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர், முத்துராஜ் தலையில் பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக முத்துராஜ் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து எப்போதுவென்றான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து பிரச்சனை காரணமாக தம்பியை அண்ணனே கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 444

    0

    0