மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்.. இரு குழந்தைகளுடன் தப்பியோட்டம் ; போலீசார் விசாரணையில் ஷாக்..!!
Author: Babu Lakshmanan27 May 2023, 11:13 am
பழனி அருகே பாப்பம்பட்டியில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகரை சேர்ந்தவர் துரை என்கிற திருமூர்த்தி கொத்தனாராக உள்ளார். இவருடைய மனைவி மாலதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் இருகின்றன. கணவன் துரை அடிக்கடி மது போதையில் வந்து சண்டையிடும் வழக்கமாக இருந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று மதியம் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மனைவி மாலதியின் தலையில் கணவன் துரை கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் தப்பி ஓடிவிட்டார். அருகில் வசித்து வந்தவர்கள் இரவு நேரமாகியும் வீட்டில் மின் விளக்குகள் எரியாததை கண்டு வீட்டை பார்த்த போது மாலதி இறந்த நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாலதியின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் துரை இரண்டு குழந்தைகளுடன் தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து பழனி தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். பழனியில் குடும்ப பிரச்சனையில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.