தூங்கும் போது நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை… மதுபோதையில் நடந்த விபரீதம் ; கொலையாளி சரண்..!!

Author: Babu Lakshmanan
24 April 2023, 11:17 am

தூத்துக்குடி அண்ணாநகர் சலவை கூடத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தூத்துக்குடி அண்ணா நகரில் சலவைத் தொழிலாளர் கூடம் உள்ளது. இந்த சலவை தொழிலாளர் கூடத்தில் ஒருவரை கொலை செய்து விட்டதாக கூறி, லோடுமேன் வேலை பார்க்கும் தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுஸிங் போர்டு பகுதியைச் சார்ந்த சண்முகம் மகன் மாரியப்பன் (43) தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் தூத்துக்குடி அண்ணா நகர் 1வது தெருவை சார்ந்த சுப்பையா மகன் சப்பானி முத்து (42) என்பதும், இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும், இவர் அயர்னிங் மற்றும் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் வழக்கம்போல் மதுஅருந்தி விட்டு வந்து சலவை கூடத்தில் படுத்து உறங்குவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவரும் மது அருந்திய நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் அதே இடத்தில் படுத்து உறங்கியுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து எழுந்த மாரியப்பன் சப்பானி முத்துவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, தான் தப்பித்தால் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

போலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 392

    0

    0