மனைவியுடன் பேசிய நண்பரைக் கண்டித்த கணவனுக்கு கத்திக்குத்து.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
20 April 2022, 10:09 am

கோவை: கோவையில் தனது மனைவியுடன் நண்பர் பேசியதைக் கண்டித்த கணவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.

ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவரது நண்பர் சந்தோஷ். இவர்கள் இருவரும் மணியின் வீட்டில் மது அருந்துவது வழக்கம். இதனிடையே சந்தோஷ் மற்றும் மணியின் மனைவிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்த மணி தனது மனைவியை கண்டித்துள்ளார். நேற்று சந்தோஷ் மற்றும் மணியின் மனைவி ஆகிய இருவரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த மணி, சந்தோஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிவிடவே இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ் மணியை கத்தியால் குத்தி தாக்கினார்.

இதுகுறித்து மணி ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Dragon Beat Vidaamuyarchi Movie Collection விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!