மனைவிக்கு அரிவாள் வெட்டு… காரில் ஏறிச் சென்று பால்காரர் உள்பட 2 பேரை வெட்டி சாய்த்த கணவன் விபத்தில் பலி ; விசாரணையில் பகீர் தகவல்!!

Author: Babu Lakshmanan
15 December 2023, 2:43 pm

கணவன், மனைவியிடையேயான பிரச்சனையில், மனைவி உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளால் வெட்டி விட்டு காரில் தப்பிய கணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரை சேர்ந்தவர் நித்யா. ஐஓபி வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சுந்தர் ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளதாகவும், இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு மனக்கசப்பு காரணமாக இரண்டு மாதமாக வீட்டிலேயே இருந்து உள்ளார்.

இதனிடையே, இவரது மனைவி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக ஒரு வீடு வாங்கியதாகவும், இது கணவரின் விருப்பம் இல்லாமல் இந்த வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை வீட்டிலிருந்த தனது மனைவி நித்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது காரில் வெட்டிய அருவாளுடன் தப்பி சென்றுள்ளார்.

அதேபோல், யாகப்பாநகர் பிரதான சாலையில் உள்ள பால் டிப்போவில் இருந்த கடை உரிமையாளர்கள் கோபி மற்றும் தாமரை இருவரையும் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளார்.

தப்பிச் செல்லும் போது தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிபட்டி என்ற பகுதியில் சாலையை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் முட்டியதில் கார் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது காரில் இருந்த அருவாள் மற்றும் அவரது கை துண்டாக கீழே விழுந்தது.

இந்த அரிவாள் வெட்டு சம்பந்தமாகவும், விபத்தில் உயிரிழந்து சம்பந்தமாகவும் தஞ்சை நகர தெற்கு காவல் துறை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் மற்றும் செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?