என்ன மனுஷன்யா…. ‘மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி’ : அஜித் செய்த செயல்… வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2022, 4:00 pm
நடிகர் அஜித் அவர்கள் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக கார் உடையவர்.
அது மட்டும் இல்லாமல் கார் மற்றும் பைக் ரேஸ் சம்பந்தமான கார் கலந்து கொண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார். இதனைத்தொடர்ந்து அஜித் துப்பாக்கி சுடுதல் துறையில் பயிற்சிகளை செய்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் உள்ளது. இங்கு 47 வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சுடும் ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் விஜயகுமார் , தமிழ்ச்செல்வன், நடிகர் அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து 4 பிரிவிகளிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டார்.
இதில் நடிகர் அஜித்குமார் சென்டர் பாயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும் ஸ்டான் டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணிவிகள் தங்கப்பதக்கமும் 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் தங்க பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்க பதக்கமும் 50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என 4 தங்கம் 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றார்.
இந்த நிலையில் நடிகர் அஜித்தை பார்க்க ரசிகர்கள் சூழ்ந்திருந்தனர். காத்திருந்த ரசிகர்களுக்காக அஜித் கையசைத்தார். இந்த காட்சிகள் வைரலாகியது.
தற்போது துப்புரவு பணியாளர்களுக்கு அஜித் மதிப்பு கொடுத்து செய்த செயல் ஒன்று சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
Thala ena manusan ya respect vera level 😍😍🤝😘😘😘😘#AjithKumar pic.twitter.com/juab0EjJT6
— Joe Selva (@joe_selva1) July 31, 2022
இதை பார்த்த ரசிகர்கள் இதுக்கு தான் இவருக்கு தலங்கற பெயர்.. ஆனா அந்த பட்டத்த கூட வேண்டாம்னு சொல்லிட்டாரு என மெய்சிலிர்த்து கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.